Saturday, September 13, 2008

Blogs மூலம் எப்படி பணம் சம்பதிப்பது?

இந்த பதிவில் Co.CC மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்ப்போம். முதலில் நீங்கள் Co.CC இல் ஒரு புதிய கணக்கை தொடங்க வேண்டும். ஒரு புது கணக்கு ஆரம்பித்த பிறகு, மெனுவில் உள்ள Refferals-ஐ சொடுக்கவும். பிறகு, அங்கு ரெபரல் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்க சொல்லும். இப்போது அதே இமெயில் ஐடி கொண்டு, ஒரு ரெபரல் அக்கவுண்ட் உருவாக்கி, உங்கள் கணக்கில் உள் நுழையவும். அங்கு, Get Banners என்று இருக்கும், அதில் உங்களுக்கு பிடித்த banner-ஐ தேர்ந்து எடுத்து, உங்கள் வலைப்பூவில் வெளியிடவும். வலைப்பூ இல்லாதோர், your personalized referral link என்ற பெட்டியில் இருக்கும் லிங்கை வெட்டி, உங்கள் இமெயில் சிக்நேச்சருக்குக் கீழ் ஒட்டவும். இதன் பயன்கள் அதனையையும் சொன்னால், கண்டிப்பாக அவர்கள் உங்கள் ரெபரல் லிங்கை சொடுக்கி ஒரு புதிய அக்கவுண்டைத் தொடங்குவார்கள். இப்படி ஒவ்வொரு புதிய சைன் அப்புக்கு 0.1 usd கிரிடிட் செய்வார்கள். 10 டாலர் சேர்ந்த பிறகு ஒரு புது .காம் டொமனோ, அல்லது வேறு எதாவது வாங்கி கொள்ளுங்கள். Co.CC-இன் பயன்கள்:1. இலவச டொமைன் நேம் (உங்கள் பிளாக்கிற்கு - பிளாக்பெயர்.blogspot.com என்பதை பிளாக்-பெயர்.co.cc என்று சுருக்கிக் கொள்ளலாம். மேலும் கூகிள் ஆப்ஸ் மூலம் 500 இலவச மெயில் ஐடி கிடைக்கும்.

சீன மென்பொருள் தொழில் துறையின் வளர்ச்சி போக்கு

சீன மென்பொருள் தொழில் துறையின் வளர்ச்சி போக்கு

கடந்த அரையாண்டில் சீன மென்பொருள் தொழில் துறையில் உயர் வேக அதிகரிப்புப் போக்கு காணப்பட்டுள்ளது. மென்பொருள் மற்றும் தகவல் சேவை தொழில் துறையில் மொத்தம் 34ஆயிரத்து 560கோடி யுவானுக்கு மேலான வருமானம் கிடைத்துள்ளது என்று சீன தொழில் மற்றும் தகவல் அமைச்சின் மென்பொருள் சேவைத் தொழில் துறையின் தலைவர் சௌ சிஷௌபான் கூறுகிறார்.
கடந்த அரையாண்டில் சீன மென்பொருள் தொழில் துறையிலான வருமானம், கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 30விழுக்காடு அதிகமாகும். இவ்வாண்டு மற்றும் அடுத்த சில ஆண்டுகளில், சீன மென்பொருள் மற்றும் தகவல் சேவைத் தொழில் துறையில் எதிர்நோக்கும் வளர்ச்சிச் சூழல்,பொதுவில் ஆதரவாக உள்ளது. சீனாவின் சீரானப் பொருளாதார வளர்ச்சி நிலை, இத்தொழில் துறையின் விரைவான வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று சௌ சிஷௌபான் குறிப்பிட்டார்.

துப்பறியும் ஈமெயில் !!

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா? அறிவது எப்படி?

நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு / நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு, அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறீர்கள். குறைந்த பட்சம், அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா இல்லையா என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்குமே!
நீங்கள் அனுப்பிய மெயிலை உங்கள் நண்பர் படித்து விட்டாரா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள, spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது. செய்முறை விளக்கம்:1). முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து, தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.2). இப்போது, http://www.spypig.com/ இணைய தளத்திற்குச் செல்லுங்கள்.
அங்கு, உங்கள் முகவரி, உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள். Step 3 -ல் முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig" என்பதைச் சொடுக்குங்க. (அப்படி செய்தால், நீங்கள் ட்ராக் செய்கிறீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.)
3). இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது சுட்டியை வைத்து, வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image" (Firefox) & Copy(IE) சொடுக்கி, copy செய்யவும்.
இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து, அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி, உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.
(கவுண்ட் டவுன் டைமர் ஓடும், அந்த ஒரு நிமிடத்திற்குள் மேலே கூறியதைச் செய்ய வேண்டும்.) அவ்வளவு தான்.
நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன், எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.

Sunday, March 30, 2008

எமது நோக்கம்

இந்த நூற்றாண்டின் இணையற்ற துறையாக விளங்கிவரும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சார்ந்த சமகால விடயங்களை பகிர்ந்து கொள்ளும் இணையத்தளம்!!

இப்போது கணினி அறிவியலின் பரம்பலானது பட்டணம் முதல் பட்டிக்காடு வரை வியாபித்து படித்தவர் பாமரர் என்ற வேறுபாடின்றி அனைத்துத் துறைகளிலும் சகலரையும் ஆட்கொண்டுவிட்டது.

தொழில்வாய்ப்பு ஒன்றை பெற்றுக்கொள்ளவோ உயர்கல்வியைத் தொடரவோ கணினி அறிவின் தேவையானது மிக மிக முக்கியமானது.
கணினியொன்றை தொட்டே பார்த்திருக்காதவர்கள், கொஞ்சமாக கற்றுக் கொண்டிருப்பவர்கள், கணினி துறையில் பட்டம் பெற்றவர்கள், ஆழமான தொழில்சார் அறிவைக்கொண்டவர்கள், கணினி துறையில் தொழில் தேடுபவர்கள், கணினி அறிவுள்ளவர்களை தமது நிறுவனங்களுக்காக எதிர்பார்த்திருப்பவர்கள் என்று எங்கள் மத்தியில் எவ்வளவு பேர்? நாம் ஏன் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யமுடியாது? எமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு நாங்களே பங்களிப்புச் செய்யலாமே ? இந்த சிந்தனைகளின் விளைவே இந்த இணையத்தளத்தின் தோற்றம்.
கால நீட்சியில் இந்த சிறுவிதை பெருவிருட்சமாகி பலன் தரட்டும் !!